அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஜாம்பவானுமான அன்ட்ரூ சைமண்ட்ஸ் மகிழுந்து விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அவர் தனது 46 ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இரவு 11 மணியளவில் டவுன்ஸ்வில்லி நகரில் ஆலிஸ் நதி பாலம் அருகே அவரது மகிழுந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் பலத்த காயங்களுக்குள்ளான அன்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்ததாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
சைமண்ட்ஸின் குடும்பத்தினரும், அவரது உயிரிழப்பை உறுதிப்படுத்தினர்.