சர்வதேச தொழிலாளர் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.5.2022) GO HOME GOTA! எனப் பெரும் வெள்ளை வர்ண ஆங்கில எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ள சுலோகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் யாழ்.நகரின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றது.
அத்துடன் பாராளுமன்றத்திற்கு வெளியே மக்கள் அரசாங்கமொன்று! எனப் பொறிக்கப்பட்டுள்ள சுவரொட்டிகளும் அதன் அருகில் ஒட்டப்பட்டுள்ளன.
இதேவேளை,மேற்படி சுவரொட்டிகளின் கீழ் ‘மக்கள் போராட்ட இயக்கம்’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.