கொழும்பில் காலி முகத்திடலில் இடம் பெறும் போராட்டத்தை தடுக்க குவிக்கப்பட்ட கலகத்தடுப்பு பொலிஸார் போராட்டகாரர்களின் கடும் எதிப்பையடுத்து வந்த பொலிஸ் வண்டியிலையே திரும்பி சென்றனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.இரண்டு பொலிஸ் வாகனங்களில் வந்த அவர்களை பொதுமக்கள் அமைதியான போராட்டத்திற்கு வந்ததன் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து திரும்பினர்.