இலங்கை செய்திகள்

IMF உதவிகளை பெற்றுக்கொள்ள சிறிது காலம் செல்லும்: நிதி அமைச்சர் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை பெற்றுக்கொள்வதற்கு பூர்த்தி செய்யக்கூடிய பல விடயங்கள் உள்ளதாக நிதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதனால் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட காலம் செல்லும் என வாஷிங்டனில் இருந்து Zoom ஊடாக நேற்று கருத்து தெரிவித்த போது கூறினார்.

இதேவேளை, வாஷிங்டன் D.C-இல் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்திற்கு முன்பாக இலங்கையர்கள் சிலர் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.

அவர்கள் ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.

ஊழல் மிக்க அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை உடனடியாக மீட்பதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்

Related posts

நாளை வியாழக்கிழமை பாரிசில் 140 பாடசாலைகள் மூடப்படும் !!!

namathufm

சர்வ கட்சிகள் மாநாடு இன்று

Thanksha Kunarasa

யாழ் அச்சுவேலி மத்திய கல்லூரியில் திருட்டு

Thanksha Kunarasa

Leave a Comment