எரிபொருள் நெருக்கடி காரணமாக, வார இறுதியில் மின் வெட்டை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில், இன்று 3 மணித்தியாலமும் 20 நிமிடங்களும், நாளை 3 மணித்தியாலங்களும் மின் வெட்டை அமுல்படுத்துமாறு மின்சார சபை கோரியுள்ளது.
அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் வார இறுதி நாட்களில் மின் வெட்டுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் இன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, 2 மணி நேரமும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படும்.
நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5:20 மணி வரை ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும்,
மாலை 5:20 மணி முதல் இரவு 9:20 மணி வரை ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.