மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி, சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசி வாடிக்கையாளர் ஒருவருக்கு அதிகபட்சமாக 05 கிலோ வீதம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வெள்ளை அரிசி கிலோ 145 ரூபாவிற்கும், நாட்டு அரிசி கிலோ 145 ரூபாவிற்கும். சம்பா அரிசி கிலோ 175 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.