ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரி நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகை தரும் மக்கள் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள் மற்றும் பலர் இன்று 15 ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய போராட்டக்களத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பங்கேற்றதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக, அரசாங்கத்திற்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.