பொதுமக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு தாம் ஆலோசனை வழங்கவில்லையென பொலிஸ் மா அதிபர் C.D. விக்ரமரத்ன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் கருணாசிறி தெரிவித்தார்.
ரம்புக்கனையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே, ரம்புக்கனையில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு உதவி பொலிஸ் அத் தியட்சகர் C.W.C. தர்மரத்ன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.P கீர்த்தி ரத்னவினால் ஆலோசனை வழங்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.