லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த தெஷார ஜயசிங்க, கடந்த 15 ஆம் திகதி தமது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இதனால் ஏற்பட்ட தலைவர் வெற்றிடத்திற்கே பொறியியலாளர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.