இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்த அழைப்புக்கு இணங்க, றம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் அதிகாரிகள் இன்று ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகினர்.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, பொலிஸ் மா அதிபர், மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோரே இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்.