இலங்கை செய்திகள்

ரம்புக்கனை சம்பவம்: பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

ரம்புக்கனை போராட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை, பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.

கேகாலை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், ரம்புக்கனை பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியாளர்கள் மீதான சுயாதீனமான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்குபற்றுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் கைப்பேசிகளின் விலைகளும் அதிகரிப்பு

Thanksha Kunarasa

செல்போன் விற்பனையை நிறுத்தியது ஆப்பிள் நிறுவனம்!

Thanksha Kunarasa

கடதாசிக்கு தட்டுப்பாடு: அச்சக உரிமையாளர்கள் பாதிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment