தெலுங்க மொழிக்கு மாற்றம் செய்யப்பட்ட பிறமொழிப் படங்களிலில் தமிழில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படமே அதிக வசூல் குவித்து சாதனை படைத்தது.
100 கோடி இந்திய ரூபாயை அந்தப் படம் வசூலித்தது.
இதுவரை தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்ட படங்களில் ரோபோ, ஐ, கபாலி, காஞ்சனா, சிவாஜி, முனி 3 என சில படங்களே வசூலில் சாதனை படைத்தன. அத்துடன் இவை அனைத்தும் தமிழ் படங்களாகும்.
ஆனால், அண்மையில், யஷ் நடிப்பில் வெளியான கன்னடப் படமான கே.ஜி.எவ் 2 படமே தெலுங்கில் மொழி மாற்றப்பட்ட படங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த படமாக மாறியுள்ளது.
இந்தப் படம் 103 கோடி இந்திய ரூபாயை வசூலித்துள்ளது .