இலங்கை செய்திகள்

யாழில் ரயிலில் மோதி சிறுவன் பலி – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் – மிருசுவில் வைத்தியசாலைக்கு அருகில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ரயில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பட்டா ரக கெப் வாகனம் ஒன்று மீது ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன் (வயது 12) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் தந்தையான நாகமணி தயாபரன் (வயது 45) மற்றும் உயிரிழந்தவரின் சகோதரனான தயாபரன் தனுஷன் (வயது 15) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் (22) பயணித்த ரயிலுடன், கொடிகாமம் மிருசுவில் வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள ரயில் கடவையில் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் பட்டா ரக வாகனத்தில் பயணித்த சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவனின் தந்தையும், சகோதரனும் படுகாயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Related posts

இஸ்ரேலில் புதிய உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு

Thanksha Kunarasa

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த இந்திய போர் கப்பல்கள்!

Thanksha Kunarasa

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Thanksha Kunarasa

Leave a Comment