எரிபொருட்கள் விலையை கருத்தில் கொண்டு சிமெந்தின் விலையை அதிகரிக்க சிமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இதன்படி, 50 கிலோ சிமெந்து பைக்கெற் ஒன்றின் விலையை ரூ. 500 முதல் ரூ. 600 வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிமெந்து பைக்கெற் ஒன்றின் விலை 2300 – 2350 ரூபாயாக சந்தையில் உள்ளது.
இதேவேளை, சிமெந்து விலை உயர்வு, புதிய கட்டடங்ளின் கட்டுமான பணி நிறுத்தப்பட்டுள்ளமை, சிமெந்தின் தேவை குறைவு என்பவற்றால் மொத்த விற்பனைக் கடைகளில் சிமெந்து இருப்பு இல்லை என்றும் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.