உலகம் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தானில் நேற்று நிகழ்த்தப்பட்ட நான்கு குண்டுவெடிப்புகளில் டஜன் கணக்கிலானோர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மசார்-இ-ஷெரிப் நகரில் உள்ள ஷியா மசூதியில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 87 பேர் காயமடைந்ததாகவும் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ். அமைப்பு, ஷியா மசூதி வழிபாட்டாளர்களால் நிரம்பியிருந்தபோது, ​​​​பை ஒன்றில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகக் கூறியுள்ளது.

ஐ.எஸ் முன்னாள் தலைவர் மற்றும் செய்தித் தொடர்பாளரின் மரணங்களுக்கு ‘பழிவாங்கும்’ உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதி என இந்த தாக்குதல் குறித்து ஐ.எஸ். தெரிவித்துள்ளது.
மற்ற மூன்று குண்டுவெடிப்புகள் குறித்து ஐ.எஸ். அமைப்பு கூறவில்லை, மேலும் அந்த குண்டுவெடிப்புகளுடன் ஐ.எஸ். அமைப்புக்கு தொடர்பு உள்ளதா என்பதும் தெளிவாக தெரியவில்லை.

இரண்டாவது குண்டுவெடிப்பானது, குண்டூஸ் பகுதியில் உள்ள காவல்நிலையம் அருகே வாகனம் ஒன்று வெடித்ததன் மூலம் நிகழ்ந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனியார் காணியில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்க முயற்சி

Thanksha Kunarasa

’விஜய் 67’ படத்தில் வில்லனாகும் நடிகர் அர்ஜூன் !

namathufm

இலங்கையில் இரு அமைச்சர்கள் பதவி நீக்கம்.

Thanksha Kunarasa

Leave a Comment