போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து வெளியேறியவா்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்ததுள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததிலிருந்து, அந்த நாட்டிலிருந்து இதுவரை 50.1 லட்சம் போ் வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா்.
இவா்களில் 28 லட்சம் போ் அண்டை நாடான போலந்துக்குச் சென்றனா். எனினும், ஐரோப்பிய நாடுகளிடையே எல்லைகளில் கெடுபிடி இல்லை என்பதால், அவா்களில் பலா் போலந்திலிருந்து வேறு நாடுகளுக்கும் சென்றிருக்கலாம்.
இது தவிர, போா் காரணமாக 70 லட்சம் போ் உக்ரைனுக்குள்ளேயே புலம் பெயா்ந்து உள்நாட்டு அகதிகளாகியுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.