புதிய அமைச்சரவை நியமனம், பிரச்னைக்கு தீர்வாகாது எனவும், 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 19ஆவது திருத்தச் சட்டத்தின் சாதகமான அம்சங்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கும், தற்போதைய நெருக்கடிகளுக்கும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீர்வுத்திட்டங்களை முன்வைக்க வேண்டுமென மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தீர்வு இல்லையெனில் பௌத்த சங்க சாசனத்தை அமுல் செய்வோம் எனவும் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.