இலங்கை செய்திகள்

ரம்புக்கனை சம்பவம்: B அறிக்கையிலுள்ள விடயங்களை மாற்றியமைக்காக மன்றில் மன்னிப்பு கோரிய உயர் பொலிஸ் அதிகாரி

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட B அறிக்கையில் சில விடயங்கள் டிப்பெக்ஸ்(Tippex) கொண்டு அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர், நேற்றிரவு(20) கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

ரம்புக்கனை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக நேற்று(20) மாலை கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் சிலரால் விடயங்கள் முன்வைக்கப்பட்ட போதே அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

குறித்த B அறிக்கையிலுள்ள விடயம் பொலிஸாரால் அழிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர்களான சட்டத்தரணிகள் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது AR அறிக்கையொன்றினூடாக பொலிஸார் தமது தரப்பு விடயங்களை நீதவானிடம் முன்னிலைப்படுத்திய நிலையில், மனித கொலை தொடர்பில் AR அறிக்கையை சமர்ப்பிக்க முடியாது என சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.

அதற்கமைய Bஅறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு நீதவானால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

Bஅறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிப்பதற்காக வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதவான், சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு விடயங்களை ஆராய்ந்தார்.

இதன்போது சம்பவம் தொடர்பில் 3 சாட்சியாளர்கள் நீதவானிடம் சாட்சியமளித்துள்ளனர்.

இதன்போது சாட்சியம் வழங்கிய ஒருவருக்கு பொலிஸாரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக சட்டத்தரணியூடாக அவர் நீதவானுக்கு மீண்டும் அதே இடத்தில் அறியப்படுத்தியுள்ளார்.

எந்த சாட்சியாளர்களையும் அச்சுறுத்தக்கூடாது என இதன்போது பொலிஸாருக்கு நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த பொலிஸ் உத்தியோகத்தரை மன்றில் முன்னிலையாகுமாறு சம்பவ இடத்திலேயே நீதவான் உத்தரவிட்டமைக்கு அமைய, சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன் பின்னர் கேகாலை வைத்தியசாலைக்கு சென்ற நீதவான், துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர்களையும் சந்தித்தார்.

இதனை தொடர்ந்து நேற்றிரவு(20) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு இன்று(21) நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Related posts

‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி நல்லூரில் இன்று வெற்றிகரமாக நடந்தது.

namathufm

தங்கமுலாம் பூசிய ஐபோன்களை வழங்கினார் மெஸ்ஸி !

namathufm

ரஷ்ய அதிபரின் மகள்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை

Thanksha Kunarasa

Leave a Comment