ரம்புக்கனை நகர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தபோது கைது செய்யப்பட்ட இளைஞருக்கு கேகாலை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்றிரவு(20) பிணை வழங்கப்பட்டுள்ளது.
18 வயதான குறித்த இளைஞருக்கு தலா 50,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்வதற்கு கேகாலை நீதவான் வாசனா நவரத்ன உத்தரவிட்டார்.
குறித்த சந்தேகநபரை நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சந்தர்ப்பத்திலேயே இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம்(19) ரம்புக்கனை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.