ரம்புக்கனை பொலிஸ் பகுதிக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று(21) அதிகாலை 05 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
நேற்று முன்தினம்(19) ரம்புக்கனையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன்,காயமடைந்தவர்கள் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.