உலகின் 200 நாடுகளில் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர், காதலியின் சமூக வலைதள பதிவால் போலீசிடம் சிக்கினார்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் வெர்டுகோ, இவர் உலகம் முழுதும் 200 நாடுகளில் தேடப்பட்டு வருகிறார்.
சர்வதேச போலீசான ‘இன்டர்போல்’ அமைப்பு இவருக்கு ‘ரெட் வாரன்ட்’ பிறப்பித்துள்ளது. தலைமறைவாக இருந்த வெர்டுகோவுக்கு பல காதலிகள் உள்ளனர்.
சமீபத்தில் அவர் கொலம்பிய நாட்டு காதலியுடன், கலி நகரில் இருக்கும் மலை உச்சியில் தங்கியிருந்தார். அப்போது இருவரும் முத்தங்களை பரிமாறிக் கொண்டனர். அந்த போட்டோக்களை அவருடைய காதலி சமூக வலைதளம் ஒன்றில் பதிவிட்டார்.
அந்தப் படங்களை ஏராளமானோர் பகிர்ந்தனர். இதைக் கண்காணித்த அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு போலீசார் கொலம்பியா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, கலி நகரின் மலை உச்சியில் காதலியுடன் இருந்த வெர்டுகோவை கொலம்பியா போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்ததும் வெர்டுகோ அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவார்’ என கொலம்பியா போலீசார் கூறினர்.