உலகம் செய்திகள்

பாகிஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு; அதிபர் கலந்துகொள்ளவில்லை

பாகிஸ்தானின் புதிய அமைச்சரவை நேற்று (19) பதவியேற்றுக்கொண்டது.

நிகழ்வில் அதிபர் Arif Alvi பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது ஏப்ரல் 10 ஆம் திகதி நள்ளிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து, புதிய பிரதமராக முஸ்லிம் லீக் (N) கட்சித் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான Shehbaz Sharif-ஐ எதிர்க்கட்சிகள் தெரிவுசெய்தன.

இந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் இடம்பெறும் வகையில், புதிய அமைச்சரவை திங்கட்கிழமை (18) பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக பதவியேற்பு விழாவில் பங்கேற்று அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என அதிபர் ஆரிஃப் அல்வி தெரிவித்ததைத் தொடர்ந்து நிகழ்வு இரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, பாகிஸ்தான் பாராளுமன்ற அவைத்தலைவர் சாதிக் சஞ்ரணி புதிய அமைச்சர்களுக்கு நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற பிரதமர் Shehbaz Sharif பதவியேற்பு விழாவிலும் அதிபர் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா நோயாளிகள் தங்குவதற்கு மக்களை வீட்டை விட்டு வெளியேற்றும் சீன அரசு

Thanksha Kunarasa

உக்ரைனுக்கு உலக வங்கி 723 மில்லியன் டாலர் கடனுதவி

Thanksha Kunarasa

இலங்கையில் மீளவும் எரிபொருள் விலை உயர்வு!

Thanksha Kunarasa

Leave a Comment