உலகின் முதல் பணக்காரராக அறியப்படும் எலான் மஸ்கிற்கு சொந்தமாக வீடு இல்லையாம். அவர் தனது நண்பர்களின் வீட்டிலுள்ள கூடுதல் அறையிலேயே தங்குகிறாராம் என்று அவரே கூறியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்தவரும், ரெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 26 ஆயிரத்து 460 கோடி அமெரிக்க டொலர்களாகும் – இலங்கை மதிப்பில் சுமார் 88 இலட்சத்து 64 ஆயிரத்து 100 கோடி ரூபாயாகும்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், ‘எனக்கென்று சொந்தமாக வீடு இல்லை. நியூயோர்க்கின் பே பகுதியில் ரெஸ்லா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் வசிக்கின்றனர். அதனால் அவர்களின் வீடுகளிலுள்ள கூடுதல் படுக்கை அறைகளையே நான் பயன்படுத்துகிறேன். நான் பெரிதாக செலவு செய்ததும் கிடையாது. விமானத்தில் செல்லும் செலவுதான் எனது அதிக செலவு என்று கூறியுள்ளார்.