இலங்கை செய்திகள்

இலங்கைக்கு வழங்கும் கடனுக்கான உறுதிப்பாடு அவசியம் –IMF

இலங்கைக்கு எந்தவொரு கடனையும் வழங்குவதற்கு, கடனை மீளச் செலுத்துவதற்கான உறுதிப்பாடு அவசியம் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

இலங்கை பிரதிநிதிகளுடன் கடன் வழங்குவதற்கான மாற்றுத் திட்டங்கள் மற்றும் கொள்கை வகுப்பு தொடர்பில் கலந்துரையாடியதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பிலான குழுவின் தலைவர் மஷிஹிரோ நொசாகி கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை மிக விரைவில் நிலையான முன்னேற்றப்பாதை நோக்கி கொண்டுசெல்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் திட்டமொன்றை வகுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் மக்கள் அடைந்துள்ள துயரங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இதன்போது கவலை தெரிவித்துள்ளது.

உடனடி நிதித்தேவையை நிவர்த்திசெய்வதற்காக கடனை மீளச் செலுத்துவதற்குள்ள இயலுமையை ஆராய வேண்டும் எனவும், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பிலான குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

தென் ஆப்பிரிக்கா வெள்ளத்தில் சிக்கி 45 பேர் பலி – 70 ஆண்டுகால இந்து கோயில் சேதம்

Thanksha Kunarasa

புதிய இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் பதவிப் பிரமாணம்

Thanksha Kunarasa

2021 உலக அழகி பட்டத்தை வென்றார் கெரோலினா! ( படம் இணைப்பு)

Thanksha Kunarasa

Leave a Comment