உலகம் செய்திகள்

பாடசாலை அருகே அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு; 6 பேர் பலி; பலர் காயம்

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் கல்வி நிலையங்களை குறிவைத்து அடுத்தடுத்து 3 குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இதன்போது பல பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் மற்றும் நகரின் அவசர மருத்துவமனையின் தகவலின்படி,

அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் காரணமாக பல குழந்தைகள் காயப்பட்டுள்ளனர் என்றும் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அஞ்சப்படுவதாக கூறப்படுகிறது.

மேற்கு காபூலில் உள்ள அப்துல் ரஹீம் ஷாஹீத் உயர்நிலைப் பள்ளிக்கு அருகிலும்,காபூலின் தாஷ்ட்-இ-பார்ச்சி பகுதியை சுற்றியுள்ள பள்ளிக்கு உள்ளேயும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. எனினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் சூழ்நிலையில் ஐ.எஸ். போன்ற அமைப்புகள் அவ்வப்போது அங்கு தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

IMF பிரதிநிதியுடன் ஜனாதிபதி சந்திப்பு

Thanksha Kunarasa

அரசுகளின் புறக்கணிப்புக்கு மத்தியில் சீனாவில் ஒலிம்பிக் கோலாகலம்!! தொடக்க விழாவில் ரஷ்ய அதிபர்!!

namathufm

சண்டிலிப்பாயில் வீட்டின் மீது தாக்குதல்!

Thanksha Kunarasa

Leave a Comment