இலங்கை செய்திகள்

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

நேற்று(18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு பெட்ரோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், ஒரு லீட்டர் 92 ரக ஒக்டேன் பெட்ரோலின் விலை 84 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 338 ரூபாவாகும்.

ஒரு லீட்டர் 95 ரக ஒக்டேன் பெட்ரோலின் விலை 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 373 ரூபாவாகும்.

ஒரு லீட்டர் டீசலின் விலை 113 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 289 ரூபாவாகும்.

ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 329 ரூபாவாகும்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, கார், வேன் மற்றும் ஜீப் வண்டிகளுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை நேற்று(18) முதல் நீக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, லங்கா IOC நிறுவனம் நேற்று முன்தினம்(17) நள்ளிரவு முதல் அமுலாகும் வரையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்திருந்தது.

அதனடிப்படையில், ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 35 ரூபாவினாலும், ஒரு லீட்டர் டீசலின் விலை 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

ரஸ்ய படைகளை புதைப்போம்: யுக்ரேன்

Thanksha Kunarasa

பால் மாவின் விலை மேலும் 300 ரூபாவினால் அதிகரிப்பு!

namathufm

உக்ரேன் தலைநகரில் வெடிப்பு சத்தங்கள்; ஐரோப்பிய நாடுகள் பரபரப்பு .

Thanksha Kunarasa

Leave a Comment