இலங்கை செய்திகள்

இலங்கையர் ஒருவருக்கு வாழ தேவையான பணம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் சமீபத்திய அதிகாரபூர்வ வறுமைக்கோடு பட்டியலை மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ளது.

2022 பெப்ரவரி மாதத்துக்காக வெளியிடப்பட்ட பட்டியலின் படி, இலங்கையில் உள்ள ஒருவர் அவரது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 5,972 ரூபாய் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை தற்போது வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தேசிய வறுமைக் கோடு பட்டியலின் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாறுபட்டுள்ளது.

இந்த பட்டியலின் படி, நபர் ஒருவரின் அடிப்படை வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பது கொழும்பு மாவட்டத்திலாகும். அது 6,482 ரூபாவாகும்.

இந்த பட்டியலில் குறைந்த பெறுமதி பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

அதன் பிரகாரம் பதுளை மாவட்டத்தில் உள்ள ஒருவருக்கு தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மாதம் ஒன்றுக்கு 5,623 ரூபாய் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீர் தாழிறக்கம்

Thanksha Kunarasa

முகக்கவச தீர்மானம் குறித்து மீள் பரிசீலனை

Thanksha Kunarasa

சுவீடனை ஒத்த நடு நிலை நாடு: ரஷ்யா முன் வைத்த நிபந்தனை நிராகரித்தார் உக்ரைன் அதிபர்!

namathufm

Leave a Comment