உலகம் செய்திகள்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

இந்திய பெருங்கடல் – பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்களை கொண்ட நாடு இந்தோனேசியா.

பூமத்திய ரேகையின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் இந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஸ்லவைசி தீவின் கொடம்பகு பகுதியில் இருந்து வடக்கு வடகிழக்கே 779 கிலோமீட்டர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் இன்று காலை 6.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகாக பதிவானது.

இந்த நிலநடுக்கம் இந்தோனேசிய நகரங்களில் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதேவேளை, நிலநடுக்கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

வவுனியாவில் நடந்த அதிசயம்

Thanksha Kunarasa

மிரிஹானயில் கைதானவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீ​ழ் வழக்கு தாக்கல் செய்ய முடியாது: SLHRC

Thanksha Kunarasa

கல்லில் வடித்த மர்ம சவப் பேழையை திறந்து பார்க்க பிரான்ஸ் முடிவு!

Thanksha Kunarasa

Leave a Comment