இலங்கை செய்திகள்

10 ஆவது நாளாகவும் தொடரும் ஆர்ப்பாட்டம்

கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டம் பத்தாவது நாளாகவும் இன்றும் தொடர்கிறது.

நேற்று (17) இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதை காண முடிந்தது.

நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அருகிலுள்ள ஜனாதிபதி செயலகம்மீது ஒளிபாய்ச்சி நூதன போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான அரசாங்கமும் பதவி விலகவேண்டும் என்று போராட்டம் நடத்துவோரே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது அவர்கள் கோட்டாபய வீட்டுக்கு போ என்ற வாசகங்களை பரப்பியதுடன், அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களையும் ஒளி மூலம் ஜனாதிபதி செயலகத்தில் பாய்ச்சினர்.

Related posts

கல்லில் வடித்த மர்ம சவப் பேழையை திறந்து பார்க்க பிரான்ஸ் முடிவு!

Thanksha Kunarasa

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் வீடுகள் – தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம்.

namathufm

மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு

Thanksha Kunarasa

Leave a Comment