இன்று (18) காலை 8.30 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்த பொடி மெனிகே புகையிரதம் தடம் புரண்டுள்ளது.
பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து 1.5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சுரங்கத்திற்கு அருகில் காலை 8.40 மணியளவில் புகையிரதம் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது புகையிரதத்தில் ஏராளமான பயணிகள் இருந்ததாகவும், அவர்களை மீண்டும் பதுளை புகையிரத நிலையத்திற்கு அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.