இலங்கை செய்திகள்

அஜித் நிவாட் கப்ராலின் பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (18) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை அன்றைய தினம் வரை நீடிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு முன்னதாக அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை.

Related posts

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனை

Thanksha Kunarasa

ரஷ்யா, பெலாரஸ் வீரர்களுக்குத் தடை

Thanksha Kunarasa

14 வயதுச் மாணவியை 7 மாத கர்ப்பிணியாக்கிய 15 வயது சிறுவன் !!

namathufm

Leave a Comment