இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி மீது பஸ் மோதி கோர விபத்து

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஆரையம்பதி பாலமுனை சந்தியில் தனியார் பஸ்வண்டியும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் இன்று பிற்பகல் (17) மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் இருந்து களுவாஞ்சிக்குடியை நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியும் களுவாஞ்சிக்குடியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் ஆரையம்பதி பாலமுனை சந்தி வீதி வளைவில், சம்பவ தினமான இன்று பகல் 12.30 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நிலையான வைப்பு தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

Thanksha Kunarasa

பிற்போடப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – எதிர்வரும் வாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

editor

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

Thanksha Kunarasa

Leave a Comment