உலகம் செய்திகள்

பிரான்சின் புதிய கொரோனா தடுப்பூசிக்கு முதல் நாடாக ஒப்புதல்

பிரான்ஸ் நிறுவனத்தின் புதிய கொரோனா தடுப்பூசிக்கு, முதல் நாடாக பிரித்தானியா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு குறைந்தபட்சம் 100 மில்லியன் டோஸ்களுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய பிரித்தானிய அரசாங்கம் முடிவு செய்த போதிலும், குறித்த தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் Valneva நிறுவனத்தின் புதிய கொரோனா தடுப்பூசிக்கு முதல் நாடாக பிரித்தானியா ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என்பதுடன், ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த தடுப்பூசியானது 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அளிக்கலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் டோஸ் போட்டுக்கொண்ட ஒரு மாதத்தில் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளலாம்.

மேலும், போலியோ மற்றும் குளிர் காய்ச்சலுக்கான தடுப்பூசி தயாரிக்கும் அதே நுட்பத்தையே Valneva நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் பயன்பாட்டுக்கு வரும் 6வது கொரோனா தடுப்பூசி இதுவாகும்.

ஆனால், கடந்த செப்டம்பரில் குறைந்தது 100 மில்லியன் டோஸ்களை வாங்குவதற்கு வால்னேவாவுடனான ஒப்பந்தத்தை போரிஸ் அரசாங்கம் ரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜேர்மனியில் எரிவாயு நெருக்கடி!

namathufm

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு

Thanksha Kunarasa

மாஸ்க்கை அவசரப்பட்டு அகற்றுவது ஆபத்து!

namathufm

Leave a Comment