நேற்று இரவோடு இரவாக நல்லூர் ஆலயத்தினை சுற்றி மதமாற்ற கிறிஸ்தவ சபை மன நோயாளிகளால் யேசு பிரச்சார போஸ்டர்கள் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக வேண்டுமென்றே ஒட்டப்பட்டுள்ளதாக சிவசேனை அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது
சிவசேனை அமைப்புக்கு இந்து உணர்வாளரிடம் இருந்து இவ்வாறு ‘நல்லூரை சுற்றி போஸ்ரர்கள் ஒட்டப்படுகின்றன என்ற தகவல் கிடைத்தது.
எமது அமைப்பை சார்ந்த இருபதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி ஒட்டியவர்களைத் தேடினோம், எனினும் ஒட்டியவர்கள் எம் கைகளில் சிக்கவில்லை. ஒரு பட்டா (படி) வாகனத்தில் வந்த 4 ஆண்களும் 1 பெண்ணும் இந்த கீழ்த்தர இழிவான செயலில் ஈடுபட்டதாக எமக்கு தகவல் தந்த உணர்வாளர் கூறியிருந்தார். இவர்கள் நல்லூர் கோவிலை சுற்றியுள்ள சிறிய ஆலயங்களின் சுவர்களிலும் தங்கள் இழி குணத்தினைக் காட்டியுள்ளனர்.


நேற்று சித்ரா பெளர்ணமி நன் நாளில் இந்துக்கள் பெருமளவில் ஆலயத்திற்கு செல்லும்போது இந்த விசம பிரச்சார போஸ்டரை பார்த்துக்கொண்டு செல்ல வேண்டும் என்ற கீழ்த்தர நோக்கிலேயே இந்த போஸ்டர்கள் இந்த தீய மதமாற்ற கிறிஸ்தவ சபையினரால் நல்லூரை சுற்றி ஒட்டப்பட்டுள்ளன. நல்லூரை சுற்றி ஒட்டப்பட்ட அனைத்து போஸ்டர்களும் உருத்திர சேனையால் கிழித்து அதே இடத்தில் தீக்கிரையாக்கப்பட்டன. இவ்வாறான கீழ்த்தர செயல்கள் செய்பவர்கள் எம் கைகளில் சிக்கும்போது அவர்கள் செய்த பிழையின் ஆழம் உணர வைக்கப்படும் எனசிவசேனை அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

