உலகம் செய்திகள்

தஞ்சமடையும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் இங்கிலாந்து

இங்கிலாந்தில் தஞ்சமடையும் அகதிகளை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் புதிய திட்டத்தை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருக்கிறார்.

இதன் மூலம் இங்கிலாந்தில் சிறிய படகுகள் வழியாக தஞ்சமடைபவர்களை அந்நாட்டிலிருந்து 6400 கிலோ மீட்டர் அப்பால் உள்ள ருவாண்டாவுக்கு இங்கிலாந்து அரசு அனுப்ப இருக்கிறது.

சட்டவிரோத புலம்பெயர்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக கூறப்படும் இதனை, இங்கிலாந்து எதிர்க்கட்சியினரும் அகதிகள் நல செயல்பாட்டாளர்களும் ‘இச் செயற்பாடானது மனிதாபிமானமற்றது, மக்கள் பணத்தை வீணடிப்பது’ என கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அதே சமயம், இங்கிலாந்து மற்றும் ருவாண்டா ஆகிய இரு நாடுகளும் இத்திட்டத்தை பொருளாதார வளர்ச்சிக்கான கூட்டு ஒப்பந்தம் எனக் குறிப்பிட்டுள்ளன.

இது அகதிகளை வஞ்சிக்கும் திட்டம் எனக்கூறி, இத்திட்டத்துக்கு எதிராக இங்கிலாந்து உள்துறை அலுவலகம் எதிரே நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தையும் நடத்தியிருக்கின்றனர்.

கடந்த ஆண்டு மட்டும் சிறிய படகுகள் வழியாக சுமார் 28 ஆயிரம் பேர் இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த 2020ல் 8500 ஆக இருந்தது.
கடந்த 2013ம் ஆண்டு இவ்வாறு தஞ்சமடையும் அகதிகளை வேறொரு நாட்டுக்கு அனுப்பும் செயலை முதன் முதலில் ஆஸ்திரேலிய அரசு தொடங்கியது.

படகு வழியாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயல்பவர்களை ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த மாட்டோம் எனக் கூறிய ஆஸ்திரேலிய அரசு, அகதிகளை அருகாமை தீவு நாடுகளான பப்புவா நியூ கினியா மற்றும் நவுருத்தீவில் உள்ள கடல் கடந்த தடுப்பு முகாம்களுக்கு அனுப்பியது

இவ்வாறு அனுப்பப்பட்ட பல அகதிகள் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாகி இன்றும் நிச்சயத்தன்மையற்ற வாழ்வில் சிக்கியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

அணுக் கதிர் வீச்சு அச்சத்தால் அயோடின் மாத்திரை வாங்க அவசரப்படும் ஐரோப்பியர்கள்! உண்மையில் அது பாதுகாக்குமா?

namathufm

யாழில் இந்திய அரசினால் மீனவருக்கென வழங்கப்பட்ட உணவு பொதி மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை! சம்மேளனம் குற்றஞ்சாட்டு.

Thanksha Kunarasa

புதுக்குடியிருப்பு பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட மாணவன் – பெரும் பரபரப்பு!

namathufm

Leave a Comment