நாட்டில் இன்றும், நாளையும் மின்வெட்டும் கால நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி இன்றும், நாளையும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களிலும் காலை 9 மணி முதல், மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் மின்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஏ முதல் டபிள்யு வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.