மட்டக்களப்பு – வாகனேரியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் தவறி வீழ்ந்தே இன்று (16) காலை 7 மணியளவில் சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிறுவனின் தாய் வௌிநாடு சென்றுள்ள நிலையில், தந்தையின் பராமரிப்பிலேயே சிறுவன் வளர்ந்துள்ளார்.
நீதவான் விசாரணைகளின் பின்னர், சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.