இலங்கை செய்திகள்

போராட்டத்தில் கலந்துகொண்ட ஆதிவாசிகள்

கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 8ஆவது நாளாகவும் தொடர்கிறது.

நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும், காலிமுகத்திடல் பகுதியிலும் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது.

இதில் தற்போது சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொள்கின்றனர்.

நேற்று (15) இரவு போராட்டம் நடைபெற்று வரும் காலி முகத்திடலுக்கு ஆதிவாசிகள் குழுவொன்றும் வந்துள்ளது.

நேற்றிரவு நடந்த போராட்டத்தில் மற்றுமொரு கலைஞர் குழுவினரும் கலந்து கொண்டனர்.

நேற்று இரவும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்தொகையான மக்கள் கூடியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

Related posts

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் – மின் கட்டண உயர்வை கண்டித்து!

namathufm

இலங்கையில் நாளைய தினமும் மின்வெட்டு!

Thanksha Kunarasa

மாலைநேர வகுப்பிற்காகச் சென்ற இரு மாணவிகளை காணவில்லை.

namathufm

Leave a Comment