கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பசில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசியை போடவில்லை எனவும், அவரது மனைவிக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முன்னாள் நிதியமைச்சர் மற்றும் அவரது மனைவிக்கு நேற்று கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.