காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
அவரை 3 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுதலை செய்து மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
தண்டனை சட்டக்கோவையின், பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் அரச ஊழியர்களின் இரகசிய கட்டளைச் சட்டத்தின் கீழ், குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிரான குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி ரீஜென்சி அரசகுலரட்ணம் மற்றும் தர்ஷன குருப்பு உள்ளிட்டோர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சார்பில் மன்றில் ஆஜராகினர்.