கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகளவிலான பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டன.

காலி முகத்திடலில் பொலிஸ் வாகனங்கள் எதற்காக நிறுத்தப்பட்டன என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.
கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகள் இன்றி அமைதியாக இடம்பெற்று வந்த நிலையில் இதுவரை குறைந்தளவு பொலிஸ் பிரசன்னமே காணப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை அதிகளவிலான பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்ததால் பதற்றமான கூழல் நிலவியமை குறிப்பிடத்தக்கது.
