கடவத்தையிலுள்ள முன்னணி ஆடை விற்பனை நிலையத்தில் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பணத்தை கொள்ளையிட முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (14) விற்பனை நிலையத்திற்கு சென்ற குறித்த நபர், பணப்பெட்டியிலிருந்த 2,72,09,380 ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்துள்ளார்.
இன்று (16) காலை வர்த்தக நிலையத்தை திறந்த சந்தர்ப்பத்தில், அங்கிருந்த நீர்த்தாங்கியில் ஒழிந்திருந்த அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லவ – நாகொல்ல பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மீது ஏற்கனவே திருட்டுச் சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.