உலகம் செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய 1600 பிரித்தானிய வீரர்கள்

உக்ரைனுக்கு ஆதரவாக 1600 பிரித்தானிய வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

நேட்டோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 1600 பிரித்தானிய வீரர்கள் ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவில் ரஷ்ய எல்லையில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ள தாபா இராணுவ தளத்தில் களமிறங்கியுள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் மீது இரசாயன குண்டுகளை வீச தொடங்கும் பட்சத்தில் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தும் வகையில் அவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மேலும், எக்சர்சைஸ் போல்ட் டிராகன் (Exercise Bold Dragon) என்று அழைக்கப்படும் தாபா இராணுவ தளத்தில் ஒரு பெரிய அளவிலான பயிற்சியில், பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள், கவச காலாட்படை, பொறியாளர்கள், பீரங்கி மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட டாங்கிகளைப் பயன்படுத்தி பிரித்தானியா, பிரஞ்சு, டேனிஷ் மற்றும் எஸ்டோனிய அணிகளைச் சேர்ந்த சுமார் 2,300 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

இலங்கையில் எரிவாயு விநியோகம் நிறுத்தம்.

Thanksha Kunarasa

நாளை வெள்ளிக்கிழமை 12 மணிநேர மின்வெட்டு!

namathufm

சோவியத் கால போர் விமானங்களை உக்ரைனுக்கு தர அமெ. ஆலோசனை !

namathufm

Leave a Comment