இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன்- ரஷ்யா இடையேயான போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார்.
உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளையும் இங்கிலாந்து அரசு செய்து வருவதுடன், ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடையையும் விதித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தமது நாட்டிற்குள் நுழைய ரஷ்யா தடை விதித்துள்ளது.
சமீபத்தில் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு நேரில் சென்று அந்நாட்டு அதிபர் Volodymyr Zelenskyy-ஐ சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.