இலங்கை செய்திகள்

போராட்டத்தில் பங்கேற்ற பொலிஸ் அதிகாரி கைது!

காலி முகத்திடல் போராட்டத்தில் பங்கேற்ற பொலிஸ் அதிகாரி நேற்று வியாழக்கிழமை இரவு விசேட புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – காலிமுகத்திடலில் ஆறாவது நாளாக நேற்றும் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸ் சீருடையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பங்கேற்றார்.

இரத்தினபுரி – சிறிபாகம – குட்டிகலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு போராட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

நாளை நான் இந்தப் பதவியில் இருக்கமாட்டேன், இன்று நான் இங்கு வந்துள்ளேன். என்னைப் போல முதுகெலும்புள்ள நாட்டின் நெருக்கடி நிலையைப் புரிந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகள் இங்கு வரவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

‘மக்களை துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம்’ – எதிர்ப்பு பேரணி ஆரம்பம்

Thanksha Kunarasa

சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக கடிதம்!

namathufm

கொழும்பில் நீர்வெட்டு

Thanksha Kunarasa

Leave a Comment