இலங்கை செய்திகள்

புன்னாலைக்கட்டுவனில் வீடொன்றில் புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல்!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் வீட்டில் இருந்த குடும்பஸ்தர் மீது வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் ரதீஸ்குமார் (வயது 41) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் தெற்கில் அமைந்துள்ள குறித்த வீட்டினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு உட்புகுந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது பெற்றோல் குண்டை வீசி தாக்குதலை மேற்கொண்டதுடன் , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் , வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி அட்டகாசம் புரிந்துள்ளனர்.

அத்துடன், வீட்டில் இருந்த பெண்களையும் வாளினை காட்டி அச்சறுத்தி, அவர்களின் பெறுமதி வாய்ந்த கையடக்க தொலைபேசிகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்பியுள்ளோம் – அமெரிக்க அதிபர்

Thanksha Kunarasa

இ.தொ.கா தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு!

namathufm

இந்தோனேசியா சுமாத்ரா தீவில் பாரிய நிலநடுக்கம்.

Thanksha Kunarasa

Leave a Comment