கிறிஸ்தவர்களின் புனித தினமான பெரிய வெள்ளி தினம் இன்றாகும். நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய வெள்ளி சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்றன.
2000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்தப்பட்ட நிகழ்வினை நினைவு கூறும் வகையில் இயேசு பிரானின் பாடுகளை குறிக்கும் பெரிய வெள்ளி தினத்தினை அனுஷ்டிக்கும் வகையில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகளும், திருச்சிலுவைப்பாதை நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
மட்டக்களப்பு நகர் பகுதிகளில் உள்ள கிறித்தவ ஆலயங்களில் விசேட ஆராதனைகளும், இயேசு பிரானின் பாடுகளை குறிக்கும் திருச்சிலுவைப்பாதை பிரதான நிகழ்வுகளும் ஆலய அருட்தந்தையர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெருமளவான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.