இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி – கரவெட்டி பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.

கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கரணவாய் ஜே|350 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.

நேற்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சமையலில் ஈடுபட்டிருந்த போது மேற்படி அடுப்பு வெடித்தாக தெரிவிக்கப்படுகிறது.

அச்சமயம் அருகில் எவரும் இல்லாத நிலையில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

நீதி கோரி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்!!

namathufm

சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை மனித உரிமை மீறல் – மனித உரிமைகள் ஆணைக்குழு

Thanksha Kunarasa

காதலனால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட யுவதி

Thanksha Kunarasa

Leave a Comment