இலங்கை செய்திகள்

முன்னொருபோதும் இல்லாத அராஜக நிலைக்குள் இலங்கை: என்னால் வாழ்த்து கூற முடியாது என சந்திரிக்கா தெரிவிப்பு

நாடு முன்னொரு போதும் இல்லாத பெரும் அராஜக நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் என்னால் எப்படி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் தனது முகநூல் தளத்தில் பதிவொன்றை அவர் இட்டுள்ளார்.

குறித்த பதிவில்,

சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் அனைத்து குடிமக்களும் அனைத்து வேறுபாடுகளையும் புறக்கணித்து மழையையும் பொருட்படுத்தாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக அமைதியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டின் எதிர்காலத்திற்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த குடிமக்கள் அனைவருக்கும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், வளமும், ஆரோக்கியமும் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, உங்கள் அனைவருக்கும் வளமும், சுபீட்சமும் மிக்க புத்தாண்டாக அமையட்டும்.

இந்த நெருக்கடியை சமாளித்து அமைதி, சகவாழ்வு மற்றும் ஜனநாயகம் கொண்ட நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ICTA தலைவர் பதவி விலகினார்

Thanksha Kunarasa

2021-இல் தெங்கு உற்பத்தி ஏற்றுமதி மூலம் 836 மில்லியன் டொலர் வருமானம்

Thanksha Kunarasa

இலங்கையில், தாயும் மகனும் செய்த செயல்.

Thanksha Kunarasa

Leave a Comment