பரிசில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் Suresnes (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த நகரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்குக்கும் Rueil-Malmaison நகர இளைஞர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
20 பேர் வரை Collège Henri-Sellier கல்லூரிக்கு முன்னால் குவிந்து ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் கத்தி, கோடரி மற்றும் கோல்ஃப் மட்டைகளை வைத்து தாக்கத்தொடங்கியுள்ளனர்.
குறித்த மோதல் தொடர்பில் பொலிஸாரிற்கு அறிவிக்கப்பட்டு 5.15 மணிக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
மோதலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகை வீசி துரத்தினர். அவர்களில் 7 பேரினை கைதும் செய்தனர்.
இச்சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவனை கத்தியால் குத்தியுள்ளனர். இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞனை தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.